Monday, March 17, 2014

என் பயணங்கள்

என் இலக்குகளின்எதிர்ப்பக்கம் பயணிக்கிறேன்
நீ இல்லா தனிமையில்


விளக்குகள் அணைந்த வெளிச்சத்தில்
விடியலை மறந்து
பாதையைத் தேடுகின்றேன்  நான்....


ஒரு தேநீர் கடையின் 
சாலையோர சந்திப்பை
எதேச்சியாகக் கடக்கிறேன்  
ஒவ்வொருநாளும்  நம் நினைவுகளோடு


முரண்பட்டு நகரும் வாழ்க்கையில்
முகவுரை எழுதாது நான்
முடிவுரைப் படித்துப் பார்க்கிறேன் 

No comments:

Post a Comment