நட்பு

பிரிவு 

                      பிரிவு .....
நட்பே எந்தன் பேனா 
பெற்று எடுத்த குழந்தைகளில் 
பிரசவ வலி அதிகம் பெற்றது ..
 இப்பிள்ளையை 

வார்த்தைகள் தேடினேன் நான் 
வாழ்த்துக்கள் சொல்லவா ?
வருகிறேன் என்று விடைபெறவ?
விழிகளில் விரைவது கண்ணீரல்லவே ...
உதிரங்கள் தான் உற்பத்தியாகின்றன ......

கற்பாறையாய் இருந்த நெஞ்சை 
கவின் மிகு சிலையாய் வடித்தது 
இக்கல்லுரி நட்பஅல்லவோ!

தோழிகளும், தோழர்களும் 
தோள் கொடுத்து - அன்று 
தூங்கிக் கொண்டிருந்த எந்தன் கனவுகளை 
தூள்ரிக்கச செய்தது - என் கல்லுரி நட்பல்லவோ 

செப்டம்பர் என்றாலே 
சிலருக்கு குலை நடுங்கும் "11 " நினைவுகள் 
நமக்கோ இன்பமான - அப் 16 தான்
 நம் பசுமையில் பூத்து இருக்கும் .

கானக்களும் , கலாட்டக்களும் தான் 
கல்லுரி வாழ்க்கை என 
கட்சிகளை காட்டும் சினிமாக்களுக்கும் 
கண்மூடித்தனமாய் நம்பும் சமுதாயத்திற்கும்
சவுக்கடி கொடுக்கும் சாட்சிகள் தான் நாம் 

கலாம்களையும் , கல்பனா சாவ்லாக்களையும் 
கண்டெடுக்கும் கற்பக விருச்சகம் தான் 
இக்கல்லுரி நட்பு ..

விதைகளாய் வீழ்ந்தோம் இங்கே
விருச்சகமாய் வின்னைதொட்டு 
நிற்கின்றோம்...........................
விழுதுகளாய் உருவெடுத்து 
வீழ்கின்ற சமுதாயத்தை நிலைநிறுத்துவோம் 

ஒன்றாய் அமர்ந்து 
நன்றாய் வாழ்ந்த நாட்கள் 
நலமுடன் வாழ்த்துகிறது 
நாளைய வாழ்க்கை நலமுடன் இருக்க 

ஏன் கலங்குகிறாய்?  எந்தன் நெஞ்சமே 
வேற்று கிரகத்திற்கா?
 நாம் 
விசா வாங்கி விட்டோம் ....
காற்றுக் கூட தோற்றுவிடும் 
களங்கமில்ல நம் நட்பை 
கலைக்க நினைத்தால் ....

No comments:

Post a Comment