இன்னும் சில மனிதர்கள் இருக்கிறார்கள்...
நானும் அப்படித்தான்...
நீ பாசம் காட்டத் தேவையில்லை,
பாசாங்கு காட்டினாலே போதும்;
நான் எளிதில் ஏற்றுக்கொள்வேன்,
அதை நிஜமென நினைத்து...
என் வழிகளில் கால்தடம் பதியென
வாசற்படியில் நிற்கவில்லை;
வலிகளையாவது தந்துவிட்டு செல்,
வளியோடு கரைந்திட...
விழியோடு கரைந்து கொண்டு இருக்கிறேன்.
கிளைகளில் கல்லெறிந்து,
வெறும் இலைகளைச் சேகரிக்கிறேன்;
வேரோடு சாய்ந்து கொள்ள வேண்டும்.
நான் இருக்கிறேனா?
என் இருப்பைச் சோதித்துக் கொள்கிறேன்;
நீயோ சோதித்துக் கொல்கிறாய்.
வெறுத்த மனதிற்கு
வெறுமையைத் தவிர வேறொன்றில்லை;
கருத்த வானிற்கு
காத்திருக்கும் மண்ணைப் போல...
நானும் ...

No comments:
Post a Comment