நான்
கொஞ்சமாக
காதலித்திருக்கலாம்!
நீ
கொஞ்சமென்றும்
காதலித்திருக்கலாம்!
கொஞ்சம்தானென்று
என் நெஞ்சத்தில்
தஞ்சம் கொண்டது
உன் நினைவுகள்...
மஞ்சத்தில் உறக்கம் என்பது மறந்து.
கஞ்சத்தில் நீ காதலுக்கு,
பஞ்சத்தில் நான் காதலுக்கு.
கொள்வதில் பெருமிதம் –
உனக்கோ -என் காதலை
கொல்வதில் பேரானந்தம்.
சொல்வதில் தயக்கம் ஏன்...?

No comments:
Post a Comment