Friday, February 28, 2014

கதை சொல்லி






விக்கிரமதித்தன் கதைபோல்
நீண்டு கொண்டேயிருக்கிறது என்காதல்

வேதாளம் கதைசொல்வதுபோல்
நீயும் ஏதோதோ புதிர்போடுகிறாய்.
நம் காதலுக்கு....

பரமார்த்த குருவும்,சீடனுமாய்
என்செய்கையும்  பரிகாசிக்கப்படுகிறது உன்னால்

எத்தனையோ தந்திரங்கள் செய்தாலும்
பஞ்சதந்திரங்கள் போல் கொஞ்சவும் கெஞ்சவும்  நிற்கிறது

மரியாதை இராமன் யாரென்று தெரியாது
புரியாது நிற்கிறேன் நீதி கேட்டு..

அம்மாவிடம் கேட்ட அம்புலிமாமா கதையாய்
நிலா(நீ) எப்போ வரு(வாய்)மென நின்று பார்க்கிறேன்.

"இதுவும் கடந்து போகும்" மெனும்
ஜென் தத்துவத்தோடு காத்திருக்கிறேன்  நான்

இவண்
கதை சொல்லி 

No comments:

Post a Comment