சௌந்தர்யம் மின்னும் யாரிந்ததேவதை நீ...யென
வார்தைக்குள் ஒளிந்திருக்கும் உன் பெயரைப்போல்
வாழ்க்கையில் ஒளிந்திருக்கிறாய்
***************$***********
மொழியல்லாது விழியாலே எனை
விளிக்கின்றாய் காதலில்
உளிசெய்த சிற்பமாய் என்நினைவுகள்
ஒளிச்சிந்தும் தூரிகையில் வழிவந்த ஓவியம்
***************$***********
கன்னகுழிதனின் சிரிப்பில்
கண்ணம் வைத்துச்சென்றாய்
எண்ணம் இதுவன்றோயென
வண்ண கனவுகள் காண்கிறது மனம்…..
***********************************$********************
வால்முளைத்த வானரமாய்த் திரிந்தவன்
வாள்கொண்ட விழியால் வீழ்த்தி
வாழ்வே நீயென எனை ஏங்க வைத்தாய்
***************$***********
அணையாய் தேங்கிய காதல் வெள்ளம்- நீ
அணைத்தவுடன் ஆனந்த தீபம் சுடர்விடுகிறது
வலிகண்டு சோர்ந்திருந்தால் – உன்
வழிகாட்டும் அரவணைப்பில்
வளிதாண்டி என்வாழ்க்கை சிறக்கிறது
***************$***********
குலம் குறுக்கே நிற்க
குளம்கட்டிநிற்கிறது கண்கள்
வலம் வருவோமெனக் காதல் வானில்'
வளம் நிறைந்த வாழ்க்கையாய். – ஏனோ
புலம்பெயர்ந்த நிலையாய் என் நிலை
***************$***********
வெள்ளம் வடிந்த நதியாய் மனம்
வெறுமையுடன் வீழ்ந்துகிடக்க
வெல்லம்தின்ற நினைவுகளாய் உள்ளம்
இவண்
$ தம்பிபையன் $


No comments:
Post a Comment