Friday, September 25, 2015

கேட்பதற்கு ஏதுமில்லா
உன்னிடம்
சொல்வதற்காக ஆயிரம் கதைகள்
என்னில்...

கரைபுரளும்  என் நினைவலைகளில்
வற்றியே கிடக்கிறது
உன் பாசம்....

எத்தனையோ மொழிகள் பேசும் நீ ....
எப்படி மறைந்தது உன் பிள்ளை மனம்  இப்பொழுது..

கட்டமைக்கப்பட்ட
கணினி நிரல்களாய்
கடத்திகொண்டு இருக்கும்
நிகழ்வுகளாய் வாழ்வு..

 உணர்வின் உயிர்ப்பு
ஒருமுறையேனும் உயிர்ப்பிக்க
உந்தன் வார்த்தைகளை
உகுத்துவிடு...

$$$ தம்பி பையன்$$

No comments:

Post a Comment