என் இலக்குகளின்எதிர்ப்பக்கம்
பயணிக்கிறேன்
நீ இல்லா தனிமையில்
நீ இல்லா தனிமையில்
விளக்குகள் அணைந்த
வெளிச்சத்தில்
விடியலை மறந்து
பாதையைத்
தேடுகின்றேன் நான்....
விடியலை மறந்து
பாதையைத் தேடுகின்றேன் நான்....
ஒரு தேநீர் கடையின்
சாலையோர சந்திப்பை
எதேச்சியாகக் கடக்கிறேன்
ஒவ்வொருநாளும் நம் நினைவுகளோடு
முரண்பட்டு நகரும்
வாழ்க்கையில்
முகவுரை எழுதாது நான்
முடிவுரைப் படித்துப்
பார்க்கிறேன்
முகவுரை எழுதாது நான்
முடிவுரைப் படித்துப் பார்க்கிறேன்




