Thursday, November 7, 2013

அம்மா ! உந்தன் மடியில்


அமெரிக்கா சென்று பில்கேட்ஸ் அரசவையில்
அமைச்சராக நினைத்தேன் பின்புதான் அறிந்தேன் –உன்
அன்பு ஆட்சியிலிருந்தல்லவோ அகன்றேன்னென்று

வலைகளுக்கிடையில் தான் எந்தன்வேலைகள் நடக்கிறது
சிக்கிக்கொண்டேன் இணையவலையில்,
சிதைந்துபோனது என் அன்பு வலை
லட்சங்கள் குவிக்கும் லட்சிய கோட்டைக்கட்டினேன்
அந்தோ !  உன் அன்புக்கோட்டையிலுருந்து அஸ்திவராக்கல்லை

டாலரின் சுழலில் தத்தளிக்கிறேன் –எந்தன்
(உயிர்) செல்களின் துடிப்புக்கூடச் செல்பேசிவழியே உன்னிடம்
போதும் போதும் இந்த  மோகம்
பார்க்க வேண்டும் உந்தன் பொன்முகம்
மழலையாக மீண்டும் பிறக்க வேண்டும்

நிலாச்சோறு உண்ணவேண்டும் நான்
மடியில் தலைவைத்து மணிக்கணக்கில் உறங்கவேண்டும்
அம்மா என்னை அனைத்துக்கொள்
இவண்
தாயின் முகம் தேடி

No comments:

Post a Comment