இலட்சங்கள்தேடும் மனிதர்களிடையே இலட்சியத்தைத்தேடும்
ஆசை
ஆசைகள் தேடுகின்ற உலகினிலே அன்பை தேடுகின்ற
ஆசை
தீபம்காட்டும் ஒளியினிலே தீயவை அழிய ஆசை
வேடம்போடுகின்ற மனிதர்களிடையே வெள்ளைஉள்ளம் காண
ஆசை
இனிமை கொஞ்சும் வாழ்வினிலே ஈதல் சிறக்க ஆசை
பணம் தேடுகின்ற வாழ்வில் பகுத்தறிவு தேட ஆசை
குறைகாணும் வாழ்வில் குணம் காண ஆசை
விடைகான உலகில் விடியலை நோக்கி ஆசை
பேசுகின்ற மொழிகளில் பேதை உள்ளம் காண ஆசை
கூடுகின்ற உள்ளங்கள் குருவி போல் வாழ ஆசை
பரந்த மனதிற்குள் பசலை படியாது வாழ ஆசை
ஒருவிழி அழுதால் மறுவிழி மருந்துபோட ஆசை
கருவிழிப் பார்வையில் கற்பனைகள் உயிர் வாழ
ஆசை
அலைகொண்ட மனதில் அணையொன்று போட ஆசை
சோதனைகொண்ட வாழ்வில் சொர்க்கம் காண ஆசை
காசைதேடுகின்ற உலகினில் காதலை தேடுகின்ற ஆசை
இவண்
ஆசைகளுடன்
No comments:
Post a Comment