Sunday, January 18, 2015

நம் பலம்

விடயங்களில்லா
சில வினாக்களோடு
நகர்கிறது வாழ்வு..

எல்லோருக்கும் தனி தனி உலகம் இருக்க .
எல்லாருமே என் உலகம் என்பது 
முட்டாள்தனமா ?.பைத்தியகாரதனமா ?

எந்தன் பலவீனத்தில்
உந்தன் பலத்தை பிரயோகிக்கிறாய் ..
இருபக்கமும்
பலவீன மட்டுமல்ல
பலமிருந்தாலும்
செல்லா காசே வாழ்வும்

கோடுகள் பூதாகரமாக்கப்பட்டால்
புள்ளிகளாய் ; வாழ்வும் தனித்தீவாய் .

எல்லாம் கடந்தவையென்பதைவிட;
கடப்பவையென்பதே
நம் பலம் .

எதுவும் இரகசியமில்லை

இங்கே எதுவும் இரகசியமில்லை
பரம இரகசியமோ ,சிதம்பர இரகசியமோ!

அழுக்குகளை ஆவனப்படுத்தியே
அனேக தருனங்களை
இரகசிய படுத்துகிறோம் .
வெளுத்திட நினைக்க மனம் வெம்பியே கிடக்கிறது.

நாம் ....
கவனிக்க மறந்தவைகளும்
கவனத்தில் மறைந்தவைகளுமே
இரகசியங்களாய் பலருக்கு..

சிலரின்
சொல்லகூட வார்த்தைகளைவிட
சொல்லா வார்த்தையே
இரகசியமாகிறது.

இலவுகாத்த கிளியும் கூட
இரகசியம் அறிந்துவிட்டது .
இலவங்காய் நிலையை...

உன் இரகசியத்தை உடைத்ததிட
வினாக்கள் வீசினால்
விடைகளில் இரகசியபடுத்துகிறாய் 
என்னை ...

உன்னில் என் காதல் நிலை
 ஒருபோதும் விளங்காதோ!
 கண்ணில் காதலா  கர்வமா