உன்
இதழ்கள்
உதிர்க்கும் வார்த்தையில்
இலையின் சருகாய்
உதிர்கிறேன்.
உணர்வுகள் மரணித்து
உயிர்வாழும்
கனவுகளாய்
நான்.
என் நினைவுகளின்
மரணித்தின் எல்லையில்
ஜனிக்கும் உன்
காதலை
எங்கே
புதைப்பாய் சொல்,
அங்கே
காத்திருக்கிறேன்
என் உயிர் பிரிந்து
சுமந்துதிரியும்
கனவுகளோடு
இவண்
@@@தம்பிபையன்@@@
No comments:
Post a Comment