தாயென்றழைத்த காவிரியோ!
தண்ணீரின்றித் தவிக்கிறது
கண்ணீரில் இதயங்கள்
கனத்த இதயமாய் உள்ளங்கள்
கருணைகொண்ட கார்மேகத்தைக்
கண்களில் காட்டுவாயோ!
இறைவா !
இங்கே இதயங்கள் சில,
இரும்பு திரைகளால்
இறுகியிருக்கின்றன
துரும்பெனப்
பறக்கும் எங்கள் வாழ்வு
துளிர்விட தூது
அனுப்புவாயோ! கார்மேகத்தை
ஏர் பிடித்த உழவனோ
எலி பிடித்துக்
கொண்டிருக்கிறான்
ஏனிந்த மாற்றம்?
என்னவன் வாழ்வினில்
சுழன்றும் ஏர்பின்னது வள்ளுவன் மொழி
உழன்றுகொண்டிருக்கிறான்
உழவன் உயிரோட்டமில்லாது இன்று.....
சோறுடைத்த சோழநாடு
கூறுபோட்டுக்
கொள்ளையடிக்கப்படுகிறது
வீதியில் துகிலுரியப்பட்ட
........வீழ்ந்து கிடப்பதால்
பச்சைப் பட்டுடித்திப்
பாரினுக்கெல்லாம்
படியளந்த பூமியில்,
வியர்வை மழையில் விளைந்தபூமி
உதிரம்சிந்தக்கூட உறுதியில்லை
இறைவா இறஞ்சிகிறோம்
உன்னிடம் வரம் கேட்கிறோம்
எங்கள் வாழ்வு வளம்பெற...
இவண் கண்ணீர்
நதியில் தண்ணீர்தேடி
தம்பிபையன்




