Monday, December 16, 2013

ஏதோ ஒன்று!





எதிர்பார்ப்பும்  எதார்த்தமும்
எதிரெதிர் திசையில் பயணிக்கிறது
எப்போதும் நமக்கு....

சந்தோஷமும் சங்கடமும்
சந்திதுக்கொள்கிறது  ஒரு புள்ளியில்.
சர்வகாலமும்  நமக்குள் ....

என் வார்த்தைகளும்  உன் மௌனமும்
நிசப்தத்தில்  பேசிக்கொள்கிறது


ஒவ்வொரு பரபரப்பான வேளையிலும்
நிசப்தமாய் கடக்கிறது  நினைவுகள்

எல்லாம் விழுங்கிய இரவு மட்டும்
எப்போதும் பரபரப்பாகிறது கனவுகளுடன் ....

No comments:

Post a Comment