உறை பனி போர்த்திய இரவு
உள்ளம் கனலாய் தகிக்கும் நிகழ்வு
நெஞ்சம் வாசிக்கிறது
மஞ்சத்தின் கவிதையை ..
உயிரினை தாங்கும் வார்த்தையில்
உறங்குகிறது நினைவுகள் உந்தன் மடியில்
ஒரு கோப்பை தேன் நீர் ;
பாதி கோப்பை பசும்பால்
மீதியை நிறைத்தாய் உன் அன்பால்-என்
கண்களில் எரியும் ஆசைதீயை
கட்டிலில் எரித்தாள்.
தொட்டில் சிரிக்கிறது புன்னகையில்..
விட்டில் பூச்சி நோக்கி
விளக்கு நகர்கிறது
இளஞ்சூட்டில் குளிர்கிறது.

No comments:
Post a Comment