Sunday, July 21, 2013

எந்தன் காதல் சுவடுகள்


காலச்சுவடுகளை அவ்வப்போது
கண்விழித்து காண்கிறேன்

பாறைமீது  பதிந்த  பாதச்சுவடுகளின்
பசுமையைப்போல் பார்வையில் தேடுகிறேன்
ஒற்றையாடிபாதையில் தொடர்ந்த
உந்தன் நினைவுகளை உலுக்குகிறேன்

நாரையாய் நான் கரையில் காத்திருக்க
மீனாய் நீ இருந்தும்  இரையாய் என்னை
சிறை வைத்துச்சென்றாய்
நுரைபோல் ஆசைகள் பொங்க
கறையாய் வீசிசென்றாய் என் காதலை....
உனை மறக்க நான் தினம் தினம் நினைக்கிறேன்
இவன்


தூண்டில் புலுவாய் துடிக்கும்

Tuesday, July 9, 2013

எந்தன் அழகி

ஒரு சண்முகமாய் நான்
வலம் வருகிறேன்
எந்தன் "அழகியை"  எங்கே  தேடுவது?

தொலைத்துவிட்ட  அந்த
துளிர் காதல் இன்றும்
சுகமாய் சுடுகின்றது

இரவின் வலியில்
இரு இமைகளுக்கிடையே
கனவாய் தோன்றிடும் அந்தகாதல்
சுகமா ? சுமையா ?
காலத்திடம் விடைகேட்கிறேன்

கண்களுக்கு நிஜமான காட்சியாய் வேண்டுமென
தவம் கிடக்கின்றேன்
விடைகள் தேடுகின்றேன்
வினாக்கள் தான்  அமைகின்றன

எந்தன் விடியல்கள்
வெளிச்சத்திற்க்கு வரமறுக்கின்றது
அச்சம் தான் மிச்சமாய் மிளிர்கிறது

எப்படி துளிர்விட்டதென்று
எந்தன்  இதயத்திற்கு தெரியவில்லை
நினைவுகள் மட்டும் தூங்காமல் துடிக்கிறது
உந்தன் முகவரிகள்
மறைக்கப்பட்டதா? மறுக்கப்பட்டதா?

இரவும் பகலுமாய்
இருவரும் வாழ்கிறோம்
எப்பொழுதும் சேரவேமாட்டோமா?
ஏக்கங்கள் நினைவில்
துக்கங்கள் தொடர்கின்றன.

விழித்துக்கொண்டே கேட்கிறேன்
உறக்கத்தை கொடுவென்று
எப்படிக் கொடுப்பாள்
எங்கோ தொலைவில்-அவள்
காலச்சக்கரத்தில் கண்ணுக்கெட்டா தொலைவில்

இவன்
"அழகி"யின்  சண்முகம்
அவளின் பொன்முகம் தேடி 
~@தம்பிபையன்@


இராஜசேகர் பிச்சைமுத்து   B.E, M.E , (Ph.D)