Thursday, May 24, 2012

எது காதல் ?


எது காதல் ?


வெள்ளை நிற வண்ணமோ
கொள்ளை  கொள்ளும்
உள்ளத்தை  என்றேன் ....
மஞ்சள் தான் ஏனோ
என் மனதை  மயக்குகிறது  என்றாய் ...

அந்தி வான சூரியன்
சிந்தும் கதிர்கள்  சிலாய்கிறது   எனக்கு ...
பால் நிலா சிந்தும் பௌர்ணமி
சிதறி கிடக்கும் நட்சத்திர இரவு
சில்லென்ற இனிமை என்கிறாய் ...

யாருமற்ற  ஒற்றையடி  பாதை எனக்கு ..
கொன்றை மர நிழல் உனக்கு ..

இப்படி  வேறு வேறாக
வாழ்ந்தாலும் ....
இருவரும்  இரு புள்ளிகளாய்
இப்படி  ரசித்தாலும் ...

ஒரு  காதல் புள்ளியால்  வாழ்கிறோம்
உன் ரசனையும்
என்  ரசனையும்
வேறானாலும் ...
உன்னோடு  நானும்
என்னோடு  நீயும்
நம்மோடு வாழ்கிறோம்
காதலால் ....

No comments:

Post a Comment