Tuesday, August 9, 2022

அடர் மௌனம்

உன் மெல்லிய  சிரிப்பலை 

என் செவிகளின் தவத்தினை 

கலைக்கிறது .. 


உன் சிறு புன்னகை 

என் விழிகளின் தவத்தினை 

கலைக்கிறது 





உன் அடர் மௌனம் 

என் மனதின் தவத்தை 

மரணக்கிறது .. 

கொட்டுதல்

" கொட்டுதல்"

என் தமிழ் அகராதியில் 

உன் திமிர் அகராதியில் 

வேறு வேறு அர்த்தங்களாய் 

வேரருக்கிறது  என்னை  .










 



தமிழ் காதல்

தலையணையோடு அணைத்துக்கொள்ள

நீ இல்லாததால் ..

தமிழோடு அணைத்துககொள்கிறேன்

என் காதைலை... 



வாழ கைகொடுக்க நீ

மறுத்தபோது

வார்த்தைகள் கொடுத்து

வாழ்த்துச் சொல்கிறது

எனக்கும் என் காதழுக்கும்

Friday, August 5, 2022

மருகிய காதல்

 

உருகி உருகி எழுதிய வார்த்தைகளில்

உறைந்து கிடக்கிறது

என்  காதல் .. 


மருகி மருகி கண்ட கனாவில்

மரணித்து போகிறது

என் நினைவுகள்



எத்தனித்தேன்

என்னைப்பற்றிய கனவுகளில் நீந்த ..

ஏனோ ..

உன்னைப்பற்றிய கனாவில் மூழ்குகிறேன்