Friday, June 28, 2019

என் காதல்


உருவகத்திற்கும், உவமைகளுக்கும்

சிக்காத உன்னழகைப்போல்

எங்கும்  சிதறிகிடக்கிறது  என்காதல்  நினைவுகள்

 
நத்தையைப்போல் எனக்குள் உன் நினைவுகள்

ஏனோ தெரியவில்லை?...

பரிகள் பூட்டிய தேராய்த் தறிகெட்டுச் செல்கிறது

என் கனவுகள் மட்டும்.

 வேண்டாமென்று நீ

வீசியெறிந்த வார்த்தைகள்

வானில்  இன்று –நட்சத்திரங்களாய்




இவண்
ஆகாயமாய்