வார்த்தைகள் எல்லாம்
வரிசைகட்டி நிற்கிறது காதல் ஏக்கத்தில்
மௌனம் கட்டியணைத்த
மெல்லிய அதிர்வுகளால்
மருகிநிற்கிறது உருகிய மனம்
எத்தனையோ நினைவுகள் கலைத்தாலும்
எப்போதும் கலையாத கனவுகளாய்
காதல்
தினம் தினம் புதுப்பித்துக்கொள்கிறேன்
கனவுகளை காதலாலே
இவண்
மருகிய மனதில் உருகிய காதலாலே
No comments:
Post a Comment