Tuesday, October 29, 2013

வார்த்தை


வலி,
வழி
ஓர்   எழுத்து மாறினாலே
வார்த்தையே   தன்னம்பிக்கை பெறுகிறது..
வா அன்பே!!!
உந்தன் எண்ணத்தை மாற்று
நம் வாழ்க்கையே மாறும்..
இவண்
வரிகளாய்


Saturday, October 19, 2013

கவிதை


இருமுறை வாசித்தாலே
வார்த்தைகளே கவிதையாகிறது
வா அன்பே !
இன்னொருமுறை வாழ்ந்துபார்போம்                                    


Tuesday, October 15, 2013

இலக்கண குறிப்பு


பெண்ணே!

கற்பனையை களமாக்கி கவிதையை நிலமாக்கி
காவியத்தில் புலவனாகி காலத்தில் சித்தனாக
கனாக்கண்டேன் நான்...

இலக்கியத்தை இதயத்திலும், இலக்கணத்தை
உவமைகள்,உருவங்கள் உணர்வாக்கி
சீர்,அசை, தளையென  சிரமேற்று
சிந்தனையில் சிலாகித்துநின்றேன்
உன்
இமைகள் சிமிட்டலில் இலக்கியம் இழந்து
பார்வை விழியினில்  “பா” வகைகள் பறந்திட
உதட்டோர சிரிப்பில் உவமைகள் உருக்குலைய
அண்ண நடை, அசைந்தாடும் இடையில்

அசை சீர் அணிகள் அடிமையாக
கண்ணகுழிதனில்  கற்பனைகள் மூழ்க
எதிர்கொண்ட பார்வையில் எதுகை மோனை இடமாற
காவிய சிந்தை மறந்து 
கயல்விழி பார்வையில் காதல் பித்தனாய்
இவன்
                              இலக்கணம்  தொலைத்து அவளின் இதயத்தில்
@~தம்பிபையன்~@