வாலிபத் தொகுதியில் நின்று
காதல் தேர்தலில் போட்டியிட ஆசை
உன் இதய மன்றத்தில் எந்தன் ஆட்சியை நிறுவ
காதல் தேர்தலில் போட்டியிட ஆசை.
தொகுதிபங்கீடு,
தொல்லை கொடுக்கும் வேட்பாளர் தேர்வு
எந்த எல்லையிலும் எனக்கு இல்லை
நான் தான் எல்லாமுமே...
உனக்கு வரன்தேடும் படலம்தான்
எனக்கு தலைவலி தருகின்ற
எதிர் கட்சி,
எதிரி கட்சி எல்லாமுமே
பலமான அக்கட்சியை எதிர்க்க
பக்கபலமாய் ஆயிரத்தெட்டு கூட்டணிகள்
நண்பர்கள் தொடங்கி, உன் வீட்டு பப்பி வரையிலும்
வெளியிலுருந்து ஆதரவென
வெளியில் சொல்லாமல் சொல்லும் நம் அம்மா
உந்தன் ஒரு ஓட்டுதான்
எந்தன் ஆட்சியை தீர்மானிக்கும் ஆஸ்தி ஓட்டு
பாடபுத்தகங்களும் ,
நோட்டுகளுமே
வெளியிடும் தினசரி நாளேடுகள்
நீ அடிக்கடி வந்துச்செல்லும்
பாதைகளும்,
பேருந்து நிறுந்த்தங்களுமே
நான் மாநாடு நடத்துகிற மௌன பிரசார கூடங்கள்
பாடசாலையோர வேலிமரங்களும், பாறைகளும்
எந்தன் தேர்தல் சுவர் விளம்பரங்கள்
பாக்கெட் மணிக்கும் செலவுகணக்கு
விடுமுறை நாட்களிலும் வெளியே எங்கேயென
என்அன்றாட நடவடிக்கைகளை கண்காணிக்கும்
அப்பாதான் அசைக்கமுடியாத தேர்தல் கமிஷன்
எந்த ஆட்சியிலும் இல்லா அதிசயம்
வாக்காளரையே அமைச்சரக்குவது
வாக்களிக்கும் உனக்கு
உள்துறை தொடங்கி
நிதிதுறை,
நீதித்துறை,
சுற்றுலாத்துறைக்கு
அமைச்சராக்குகிறேன்
நீ சம்மதித்தால் அனைத்து துறைக்கும் அமைச்சராக்கிவிட்டு
இவன்
உன் இதயமன்றத்தை ஆளநினைக்கும்
~ தம்பிபையன்~@)



No comments:
Post a Comment