Friday, October 17, 2014

காதல் சதுரங்கம்

நினைவுகள்  தப்பிச்செல்லும் 
சில நொடிகளில் 
கனவுகளுடன் வாழ்ந்துவிடுகிறேன் 
உன்னோடு....

காதலிப்பவன் எல்லாம்
கவிஞனாவதில்லை
காதலில் ஜெய்பதால் .....
நான்  கவிஞனானேன்  இப்போது 
உன்னால்...


உன்னால்
காதல் சதுரங்கத்தில் 
எல்லா திசையிலும்
எப்படியும், எப்பொழுதும் 
நகர்தல் சாத்தியமாகிறது .
இராணியாய்   ...


நான் 
கவனமான நகர்வானாலும் 
எப்படியும் சிறை படுத்தபடுகிறேன் 
இராஜாவாக .... 



வீழ்ந்தாலும் 
செம்மையான நகர்வால்
சிப்பாயிலிருந்து உயிர்த்தெழ முடிகிறது 
உன்னால் ...
மீண்டும் இராணியாய்


நிஜங்கள் மறிக்கொண்டேயிருப்பதால்
நிழல்கல்ளோடே  வாழப்பிடிக்கிறது 
எனக்கு ....


இவண் 
கனவுகளுடன் 
தம்பிபையன்